சசிகலா கோஷ்டியை எதிர்த்த மாஃபா பாண்டியராஜனுக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

மாஃபா பாண்டியராஜனுக்கு ஆவடி தொகுதியில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு சென்ற அவரை மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவடி தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜனுக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு தெரிவித்தனர்.

சசிகலா முதல்வராக அரியணை ஏற காய் நகர்த்தியபோது, திடீரென வீறு கொண்டு எழுந்து, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தினார்.

Mafoi Pandiyarajan gets royal welcome from the Avadi people

இந்நிலையில் தங்கள் தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்களை மக்கள் தொடர்பு கொண்டு ஓ.பி.எஸ் பக்கம் போகுமாறு அழைப்புவிடுக்க தொடங்கினர். அப்படி மக்களின் அழைப்புக்கு மரியாதை கொடுத்து சசிகலா குரூப்பிலிருந்து ஓ.பி.எஸ் பக்கம் சென்றவர்தான் அப்போது அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன்.

நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா தரப்பு கை காண்பித்த எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது. இதனால் ஓ.பி.எஸ் மற்றும் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஏமாற்றமடைந்தனர். அதேநேரம், தொகுதி மக்களோ அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

மாஃபா பாண்டியராஜனுக்கு ஆவடி தொகுதியில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு சென்ற அவரை மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தங்கள் மனதை புரிந்து கொண்டு அமைச்சராக இருந்தபோதிலும், அரசுக்கு எதிராக திரும்பியதற்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அதேநேரம், சசிகலா தரப்புக்கு ஆதரவாக வாக்களித்த 122 அதிமுக எம்.எல்.ஏக்களும் இன்னும் தொகுதி பக்கம் போகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+