தடை போட்டால் சாப்பிடுவோம்.. ருசியான மாட்டுக்கறி தின்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம்
மாட்டிறைச்சி தடையை எதிர்த்து, ருசியான மாட்டுக்கறி தின்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி: பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகள் இறைச்சிகாக சந்தைகளில் விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தடையை அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தை மாணவர்கள், சமூக இயக்கத்தினர், நடத்தி வருகின்றனர்.

மாட்டுக்கறி தின்று..
இந்நிலையில், இன்று திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ருசியான மாட்டுக்கறி தின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு முழக்கம்
பின்னர், அங்கு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டுக்கறி தடைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். இந்தப் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு பேனர்களை கையில் ஏந்தி முழக்கமிட்டனர்.

கைது
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீசார் கைது செய்யப்பட்டனர். மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்கக் கூடாது, அது மக்களின் விருப்பம். ஆர்.எஸ்.எஸ்.சின் வலதுசாரி சிந்தனையை திணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை உடனே நிறுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

மாட்டுக்கறி சமைத்து..
மாட்டுக்கறியை சமைத்து உண்ணும் போராட்டம், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் என பல்வேறு வகையான போராட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு இந்த உத்தரவை திரும்பப் பெற தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications