For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலுக்காக கெஞ்சிய கட்டிய மனைவி; காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்த தியாகக் கணவன்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையைச் சேர்ந்த எஞ்சினியர் ஒருவர், தன்னுடைய மனைவியின் காதலுக்காக அவரை காதலனுடன் சேர்த்து வைக்க விவகாரத்திற்கு சம்மதித்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் டாக்டர் கேம்ப் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்தவர் ஒருவருடன் பள்ளியில் படித்த போது காதல் மலர்ந்துள்ளது. அவர் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் அப்பெண்ணின் காதலுக்கு அவருடைய வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். படிப்பையும் பாதியில் நிறுத்தினர்.

இருப்பினும் காதலர்கள் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். இதை அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி அப்பெண்ணை அவருடைய உறவினராக சென்னையில் வேலை பார்த்து வரும் ஒருவருக்கு ஜூன் 11 ஆம் தேதி கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் அவரிடம் தன்னுடைய காதலை சொல்லி அழுதுள்ளார் இதையடுத்து அம்மணமகன் அப்பெண்ணின் காதலன், அவருடைய பெற்றோரை சந்தித்து நடந்த சம்பவம் பற்றி விளக்கிக் கூறி அப்பெண்ணிற்கு, காதலனுக்கும் திருமணம் செய்து வைக்க சம்மதம் பெற்றார்.

பின்னர் இது பற்றி தனது பெற்றோர், பெண்ணின் பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அப்பெண்ணையும், எஞ்சினியரையும் சென்னையில் வாடகை வீடு பார்த்து தங்க வைத்தனர். இருவரும் தம்பதி போல் நடித்து காலத்தை கடத்தினர்.

இந்நிலையில் தாலி கட்டிய மனைவியை காதலனுடன் திருமணம் செய்து வைப்பதற்காக விவாகரத்து வழங்க கணவரும் சம்மதம் தெரிவித்தார். இதற்காக அப்பெண்ணும், காதலனும் எஞ்சினியருக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது அப்பெண்ணும், கணவரும் விவாகரத்து கோரி கோர்ட்டை அணுகி உள்ளனர். விவாகரத்து கிடைக்கும் வரை அப்பெண் கங்காவதியில் உள்ள பெண்கள் நல காப்பகத்தில் தங்கி இருக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

English summary
Chennai engineer decided to unit his wife with her lover, he agreed to give divorce.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X