ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மெரினாவில் போராட்டமா? சாலைகளுக்கு சீல்
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மெரினாவில் மாணவர்கள் போராட்டம் நடத்த உள்ளதாகத் தகவல் பரவியதால் மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் மெரினாவில் கூட இருப்பதாகத் தகவல் பரவியது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் கிராம மக்கள் 2ம் கட்டப் போராட்டத்தை ஏப்ரல் 12-ம் தேதி துவக்கினர். 100 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகள், பெண்கள் போராடி வருகின்றனர்.

கிராம மக்களின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், மெரினா கடற்கரை சாலையில் 200-க்கும் மேற்பட்டட போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தை போன்று நெடுவாசல் கிராம மக்களுக்காகப் போராட்டம் நடைபெற்றுவிடக் கூடாது என முன்னெச்சரிக்கைக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரை சாலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மெரினாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்தும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications