பிளேடு வாங்கி கொண்டு டீச்சரிடம் நெருங்கிய கணவன்.. ஓட்டம் பிடித்த மக்கள்.. கடைவீதியில் ஒரே அக்கப்போர்
மயிலாடுதுறையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார் கணவர்
மயிலாடுதுறை: நடுரோடு என்றும் பார்க்காமல், பெண்ணின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார் கணவர்.. இந்த சம்பவம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே உள்ளது நல்லுச்சேரி கூடலூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் ஜான்சன் சத்தியசீலன்.. இவரது மகன் விக்டர் வினோத்குமார்.
35 வயதாகிறது.. மனைவி பெயர் புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட்... இவருக்கு 37 வயதாகிறது.. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

2 பிள்ளைகள்
இவர்களுக்கு கேப்ரியல் பிரின்ஸ் என்ற 9 வயது மகனும், பெர்னிக்கா சஜன் என்ற 6 வயது மகளும் இருக்கிறார்கள்.. வினோத்குமார் தினமும் தண்ணி அடிப்பவராம்.. குடித்துவிட்டு ஜூலியட்டிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.. இதனால் தம்பதிக்குள்ளும் நிறைய தகராறு வந்து போயுள்ளது.. ஒருகட்டத்தில் வெறுத்து போன ஜூலியட், கீழப்பாதி வாய்க்கால்கரை தெருவில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

தகராறு
இப்போதைக்கு சங்கரன்பந்தலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வருகிறார் ஜூலியட்.. இந்நிலையில், வழக்கம்போல் பள்ளியில் இருந்து, ஜூலியட் பஸ்ஸில் செம்பனார்கோயில் கடைவீதிக்கு வந்தார்... அப்போது அவரை வினோத்குமார் வழிமறித்து பேசினார்.. முன்னாடி மாதிரி இப்போது தான் இல்லை என்றும், தண்ணி அடிப்பதை விட்டுவிட்டதாகவும் மனைவியிடம் சொல்லி உள்ளார்.. மேலும், தற்போது திருந்தி விட்டதால், இனிமேல் எந்த பிரச்சினையும் வராது, ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று மனைவியை அழைத்துள்ளார்.

பிளேடால் கிழித்தார்
ஆனால், கணவனுடன் செல்ல ஜூலியட் மறுத்துள்ளார்.. இது வாக்குவாதமாக மாறி உள்ளது.. இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார், மறைத்து வைத்திருந்த பிளேடு எடுத்து ஜூலியட்டின் கழுத்தை கிழித்துள்ளார்.. இதில் ஜூலியட் வலியால் அலறி துடித்துள்ளார்.. ரத்தம் கொட்டி உள்ளது.. இதை பார்த்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்...

பிளேடு
இது தொடர்பாக செம்பனார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.. இனிமேல் தண்ணி அடிக்க மாட்டேன், திருந்தி விட்டேன் என்று வினோத்குமார் மனைவியிடம் சொன்னபோதுகூட, ஃபுல் போதையில்தான் இருந்தாராம்.. கூட்டம் அதிகமாக இருக்கும் கடைவீதி என்றுகூட பாராமல், குடிபோதையில் மனைவியின் கழுத்தை பிளேடால் கிழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது வினோத்குமார் ஜெயிலில் உள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications