மயிலாடுதுறையில் போலீஸ் குடியிருப்புக்கு தனியாக அழைத்து.. 16 வயது பெண்ணிடம் அத்துமீறிய காவலர் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் திருநாவுக்கரசு, போலீஸ் குடியிருப்புக்கு அருகே வசிக்கும் 16 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அத்துமீறி உள்ளார். இந்த விவகாரத்தில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 34 வயதாகும் திருநாவுக்கரசு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். திருநாவுக்கரசுக்கு கல்யாணம் ஆகி மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். மனைவி, குழந்தைகள் சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். திருநாவுக்கரசு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

காவலரான திருநாவுக்கரசு, போலீஸ் குடியிருப்புக்கு அருகே வசிக்கும் ஒருவருடன் பழகி உள்ளார். அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் மொபைல் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் திருநாவுக்கரசின் நண்பருக்கு ஒரு மகள் உள்ளார். அந்த சிறுமிக்கு 16 வயது ஆகிறது.
இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கும், நண்பரின் மகளான சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியை காதல் என்ற பெயரில் வலையில் வீழ்த்திய திருநாவுக்கரசு, இதையடுத்து யாரும் இல்லாத நேரத்தில் கடந்த ஜூலை 8-ந்தேதி வீட்டிற்கு அழைத்துள்ளார். காவலர் குடியிருப்புக்கு வரவழைத்த திருநாவுக்கரசு அவரிடம் வலுக்கட்டாயமாக அத்துமீறி உள்ளாராம். பலாத்காரம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, மாவட்ட குழந்தைகள் உதவி மையத்துக்கு புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில் திருநாவுக்கரசு மீது, பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ்காரர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்தார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications