மயிலாடுதுறை To சேலம்.. காலையில் ரயில்வே ஸ்டேஷனில் அந்த காட்சி.. மலைத்த பயணிகள்.. அந்த "பெட்டி" எங்கே
மயிலாடுதுறை: மயிலாடுதுறை டூ சேலம் ரயிலில் திடீரென மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.. இதை பார்த்து பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்கு பெரிதும் கை கொடுப்பது, அங்கு செயல்பட்டு வரும் லோக்கல் ரயில்கள் என்று சொல்லப்படும் மெமு ரயில்கள்தான்.. நகர்ப்புறங்களில் நெரிசல் நிறைந்த பஸ்களைவிட, பலரும் தேர்ந்தெடுப்பது இந்த லோக்கல் ரயில்களைதான்.. இதில் கட்டண செலவும் குறைவாகவே இருக்கும்..

ரயில்கள்: இந்த லோக்கல் ரயில்களில்தான், EMU, MEMU, DEMU என்று எழுதியிருப்பார்கள்.. ரயில்களில் எக்ஸ்பிரஸ், ராஜஸ்தானி போலவே, லோக்கல் ரயில்களும் இப்படி வித்தியாசங்கள் உண்டு..
இதில், MEMU ரயில் என்பது, மெயின்லைன் எலக்ட்ரிக் மல்ட்டிபிளி யூனிட் என்பதாகும்.. MEMU என்பது ஒரு மின்சார மல்டிபிள் யூனிட் (EMU) ரயிலாகும்.. நம்முடைய சென்னையில் பீச் ஸ்டேஷனில் இருந்து தாம்பரம் வரை செல்லும் எலக்ட்ரிக் ரயில்கள் இவைகள்தான்..
மயிலாடுதுறை: இந்நிலையில், மயிலாடுதுறையிலிருந்து சேலம் செல்லக்கூடிய பயணிகள் ரயில் திடீரென மெமு ரயிலாக மாற்றப்பட்டிருக்கிறது.. மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு தினசரி காலை 6.20 மணிக்கு பயணிகள் ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த வருடம் முதல் சேலம் வரை இந்த ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், காலை 6.20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரயில் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல் மார்க்கமாக மதியம் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது. பிறகு மறுமார்க்கமாக சேலத்தில் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சி வழியாக மயிலாடுதுறையை இரவு 9.45 மணிக்கு வந்தடைகிறது.
பயணிகள் : ரிசர்வேஷன் இல்லாத இந்த ரயிலில் பள்ளி - கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர்கள் என நிறைய பேர் பயணித்து வருவதால், இதற்கான தேவைகளும் அதிகரித்துள்ளது.

வெறும் 12 பெட்டிகளுடன் இயங்கி வரும் இந்த ரயிலை, 16 பெட்டிகளாக சேர்த்து மாற்றி இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரி வருகிறார்கள். இந்த கோரிக்கை எப்போது நிறைவேறும்? என்று காத்திருந்த பயணிகளுக்கு இன்று, ரயில்வே ஸ்டேஷனில் அதிர்ச்சி காத்திருந்தது.
இந்த ரயிலை மெமு ரயிலாக மாற்றியிருக்கிறார்கள்.. அத்துடன், 12 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயிலை, வெறும் 8 பெட்டிகள் மட்டுமே கொண்ட ரயிலாகவும் மாற்றி இன்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நெரிசல் நிறைந்து காணப்படும் நிலையில், இப்போது பெட்டிகள் குறைக்கப்பட்டுவிட்டதால், பெரும்பாலான பயணிகள் நின்று கொண்டே பயணிக்கும் நிலைமையும் வந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், பெயர் பலகையும் இல்லாததால், ரயில் எங்கே போகிறது? என்பதை கூட கண்டுபிடிக்க முடியாமல் பயணிகள் அவதிப்பட்டுள்ளனர்.. அதனால், பழைய முறையிலேயே ரயிலை இயக்க வேண்டும், கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ரயில் பயணிகள் சங்கத்தினர் அறிவித்திருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications