எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம்: குவிந்த மாணவர்கள்
சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் விநியோகம் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை வாங்க ஏராளமான மாணவ, மாணவிகள் பெற்றோருடன் குவிந்தனர்.
தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவ கல்லூரிகளும் சென்னை பாரிமுனையில் ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. அரசு மருத்துவ கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்குரிய 2172 எம்.பி.பி.எஸ். இடங்கள், 12 சுயநிதி மருத்துவ கல்லூரி மூலம் கிடைக்கும் 900-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் இடங்கள், அரசு பல் மருத்துவ கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மாணவ-மாணவிகள் இடையே கடும் போட்டி நிலவும். இந்த வருடமும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர மாணவர்கள் இடையே அதிக ஆர்வம் உள்ளது.
விண்ணப்பங்கள் விற்பனை
அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) சேருவதற்கான விண்ணப்ப படிவம் வினியோகம் சென்னை உள்ளிட்ட 19 மருத்துவ கல்லூரிகளிலும் இன்று தொடங்கியது.
குவிந்த மாணவர்கள்
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் வாங்க காலையிலேயே மாணவ-மாணவிகள் பெற்றோருடன் குவிந்தனர். காலை 10 மணிக்கு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி விண்ணப்ப படிவங்களை வழங்கி தொடங்கி வைத்தார். பொதுப் பிரிவினர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு தனித்தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி கூறியதாவது:
ஜூன் 2 கடைசி தேதி
19 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஒரு பல் மருத்துவ கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 30-ந்தேதி வரை படிவங்கள் கிடைக்கும். ஜூன் 2-ந்தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்பிக்கப்பட வேண்டும்.
ரூ.500க்கு டிடி
மதிப்பெண் பட்டியல், ஹால் டிக்கெட், சாதிச்சான்று வேண்டுதல் கடிதத்துடன் சென்னையில் மாற்றத்தக்க ரூ.500 மதிப்பிலான டி.டி. எடுத்து கொடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படும்.
இணையதளத்தில் விபரம்
விளையாட்டு வீரர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் நேரில் தான் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் tn.health org.in இணைய தளத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும். அதில் சென்று தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
ஒரே விண்ணப்பம்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் போதுமானது. 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications