கர்நாடக அணையிலிருந்து 1.17 லட்சம் கனஅடி நீர் திறப்பு: 90 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கியுள்ளது.
Recommended Video

சேலம்: கர்நாடக அணையிலிருந்து 1.17 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

1.17 லட்சம் கனஅடி
கர்நாடக அணையில் இருந்து தமிழகத்துக்கு 1.17 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 82,838 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கபினி அணை
கபினி அணையில் இருந்து 35000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

விரைவில் 90 அடி
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.20 அடியில் இருந்து 88 அடியாக உயர்ந்துள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்மட்டம் 50.30 டிஎம்சி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 49,000 கன அடியில் இருந்து 60,120 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50.30 டிஎம்சியாக உள்ளது.

விரைவில் பாசனத்திற்கு திறப்பு
குடி நீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications