அமைச்சர் கடம்பூர் ராஜூ கீழ்த்தரமானவர்.. சரமாரியாக விளாசிய துரைமுருகன்!
அமைச்சர் கடம்பூர் ராஜூ கீழ்த்தரமானவர் என்பது அவரது பேச்சு மூலம் தெரியவந்துள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அமைச்சர் கடம்பூர் ராஜூ கீழ்த்தரமானவர் என்பது அவரது பேச்சு மூலம் தெரியவந்துள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடத்தின் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். அவர்களின் இந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது.
அதன்பின் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்தது.

தடுத்து இருக்கலாம்
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக கட்சி தொண்டர்களிடையே பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இடம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக மேல்முறையீடு செய்திருந்தால் இடம் கிடைக்காமல் தடுத்து இருக்கலாம் என தெரிவித்தார்.
[அம்மா இல்லாம இந்த பிள்ளைங்க பேசுறதையெல்லாம் கேட்கவே முடியலைங்க!]

அதிமுக போட்ட பிச்சை
5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோதே இறந்திருந்தால், அரசு மரியாதை கிடைத்து இருக்கும் எனவும், ஆனால் தற்போது அரசு மரியாதை கிடைத்து இருக்கிறது என்றால் அது அதிமுக போட்ட பிச்சை என கூறினார்.

போனால் போட்டும்..
மேலும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கலாம் என்றும், சரி எங்கேயாவது வைத்துவிட்டு போகட்டும் என்றுதான் தாம் கையெழுத்து போட்டதாகவும், பிறகு முதல்வரும் கையெழுத்து போட்டதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

பலரும் கண்டனம்
அமைச்சர் கடம்பூர் ராஜுவின் இந்த கருத்து திமுக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.

நீங்கள் ஒதுக்கியிருந்தால்
இந்நிலையில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் அரசு ஒதுக்கியிருந்தால் பிச்சை என எடுத்துக்கொள்ளலாம்.

தொல்லை தந்தீர்கள்
நீங்கள் தான் இடம் தராமல் தொல்லை தந்தீர்கள். நாங்கள் நீதிமன்றத்தில் வாதாடி தானே மெரினாவில் இடத்தை பெற்றோம். அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் பற்றி தெரியாத ஒரு அமைச்சர் இப்படி கண்ணியம் இழந்து கீழ்த்தரமாக பேசுவது சரியல்ல என்றார்.

கீழ்த்தரமானவர்
மேலும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கீழ்த்தரமானவர் என்பது அவரது பேச்சு மூலம் தெரியவந்துள்ளது என துரைமுருகன் தெரிவித்துள்ளார். 304 வாக்கில் வெற்றிபெற்ற செல்வாக்கு இல்லாத கடம்பூர் ராஜூ கலைஞரை எப்படி விமர்சிக்கலாம் என்றும் கேள்வி எழுப்பினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications