ரசாயனம் கலக்கவில்லை என நிரூபிக்க தயாரா.. தனியார் பால் நிறுவனங்களுக்கு அமைச்சர் சவால்!
பாலில் ரசாயனம் கலக்கவில்லை என நிரூபிக்க தயாரா என தனியார் பால் நிறுவனங்களுக்கு அமைச்சர் ராஜேந்தி பாலாஜி சவால் விட்டுள்ளார்
சென்னை: பாலில் ரசாயனம் கலக்கவில்லை என நிரூபிக்க தயாரா என்று அமைச்சர் ரஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார். தனியார் பால் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று தெரிவித்திருந்ததார். அவரது இந்த கருத்து தற்போது பூதகரமாகியுள்ளது.
அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. தாங்கள் பாலில் ரசாயனத்தை கலக்கவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.

தயிரையே பாலாக்குகின்றன
இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது தனியார் பால் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குகின்றன என்று அவர் குற்றம்சாட்டினார்.

கெடாமல் இருக்க ரசாயனம்
பால் கெடாமல் இருக்க ரசாயனம் கலக்கப்படுவதகாவும் அவர் கூறினார். ரசாயனம் கலக்கப்படும் பால் உடல் நலத்திற்கு கேடானது என்றும் அவர் தெரிவித்தார்.

நிரூப்பிக்க முடியுமா?
மேலும் தனியார் பால் நிறுவனங்கள் தாங்கள் பாலில் கலப்படம் செய்யவில்லை என நிரூபிக்க தயாரா என்றும் அவர் சவால் விடுத்தார். சமூக ஆர்வலர்களை தங்கள் நிறுவனங்களுக்கு அழைத்து சென்று பால் தயாரிக்கும் முறையை காண்பிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆடிப்போயுள்ள தனியார் நிறுவனங்கள்
ரசாயனம் கலப்பதை தனியார் நிறுவனங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். அமைச்சரின் இந்த பரபர குற்றச்சாட்டுகளால் தனியார் பால் நிறுவனங்கள் ஆடிப்போயுள்ளன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications