கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலியான விவகாரம்: விசாரணைக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவு
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகரில் பாவனா என்ற 10 வயது சிறுமியும் யுவஸ்ரீ என்ற 8 வயது சிறுமியும் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மின் இணைப்பு பெட்டியில் இருந்து அறுந்து தொங்கிய மின்கம்பியை அவர்கள் தவறுதலாக மிதித்தனர்.

இதில் சகோதரிகளான 2 சிறுமிகளும் படுகாயமடைந்தனர். இதையடுத்து 2 சிறுமிகளும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைப்பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
மின் கம்பி அறுத்தது குறித்து புகார் அளித்தும் மின் வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் மின்வாரிய ஊழியர்களை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிறுமிகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க மின்துறை அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டுள்ளார். மேலும் தவறு செய்த மின்வாரிய ஊழியர்கள் மீது விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி உறுதி தெரிவித்தார்.
புகார் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார். இரண்டு சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications