நெடுவாசல் போராட்டத்தை சீர்குலைக்க அமைச்சர் விஜயபாஸ்கர் முயற்சி?
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் நெடுவாசல் மக்களை திசை திருப்பி போராட்டத்தை சிதைக்கும் முயற்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுக்கோட்டை: இயற்கை எரிவாயு என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி நெடுவாசல் மக்கள் கடும் போராட்டத்தில் 13 நாட்களாக ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை தடுக்க பல்வேறு முயற்சிகள் அரசு தரப்பில் இருந்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயி அமைப்பினர், திரையுலகினர், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், சுற்றுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

நெடுவாசல் போராட்டம் தீவிரமானதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போராட்டக்காரர்களிடம் அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் சொன்ன எதையும் கிராம மக்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தத் திட்டத்தை ரத்து செய்தால் மட்டுமே போராட்டம் நிறுத்தப்படும் என்று கறாராய் சொல்லிவிட்டார்களாம் மக்கள்.
இதனால் கடுப்பாகிப் போன அமைச்சர், இந்தப் போராட்டத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். அதே போல, தற்போது நெடுவாசல் கிராமத்தில் நடக்கும் போராட்டத்தை சீர்குலைக்க அமைச்சர் விஜயபாஸ்கர் காவல் துறைக்கு ரகசியமாக அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எது எப்படி இருந்தாலும், யார் தடுத்தாலும் தங்களது போராட்டம் தொடரும் என்றும் உறுதியாய் போராட்டக் களத்தில் 13வது நாளாய் இன்று உள்ளனர் நெடுவாசல் மக்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications