அதிகாரியின் சாவில் பொய் புகார்.. வழக்கு தொடர போவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு
சென்னை: அவதூறு பரப்பும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் விஜய பாஸ்கர்.
விவசாயத்துறை அதிகாரியான முத்துக்குமாரசாமியின் மரணத்தில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத் தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சுகாதாரத்துறை அதிகாரி அறிவொளியின் சாவில் மர்மம் இருப்பதாகவும் பணி நியமனங்கள் தொடர்பான விவகாரத்தில் அவர் மனம் உடைந்தது தான் அவரது இறப்புக்கு காரணம் என்றும் புகார் கிளப்பப்பட்டுள்ளது.
இந் நிலையில் இது குறித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் காசநோய் திட்டத்தின் மாநில அலுவலராக பணியாற்றிய டாக்டர் ஜே.அறிவொளியின் துரதிர்ஷ்டவசமான மரணத்தைப் பற்றி சில அரசியல் கட்சித் தலைவர்கள் முற்றிலும் தவறான செய்திகளை பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பி வருகிறார்கள். பிப்ரவரி 22ம்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புற்றுநோய் ஆய்வில், அவருக்கு மிகவும் முற்றிய நிலையில் நோய் இருந்தது கண்டறியப்பட்டது. பல்வேறு ஆய்வுகள் மூலம் அது நிரூபிக்கப்பட்டது.
பணி நியமனத்தின் பொருட்டு அழுத்தம் கொடுக்கப்பட்டதுதான் அதிகாரியின் இறப்புக்கு காரணம் என்ற வகையில் சில அரசியல் கட்சித் தலைவர்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அத்தகைய அரசியல் கட்சித்தலைவர்கள் மீது குற்றவியல் மானநட்ட வழக்கு தொடர அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு மடியில் கனமில்லை மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications