ஜெயலலிதா உடல் நலம் விசாரிக்க இன்று சென்னை வருகிறார் மோடி?
சென்னை: ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரிக்க சென்னைக்கு பிரதமர் மோடி இன்று வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நலம் குறித்து தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அப்போலோ வந்து விசாரித்துவிட்டு செல்கின்றனர். மேலும், டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி திடீரென்று சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்துக் சென்றார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அப்போலோவுக்கு சென்றார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பாஜக தலைவர் அமித் ஷாவும், மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியும் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மருத்துவர் குழுவிடம் விசாரித்து விட்டுச் சென்றனர்.
இதனையடுத்து, பிரதமர் மோடி எப்போது ஜெயலலிதாவின் உடல் குறித்து விசாரிக்க சென்னை வருவார் என்ற கேள்வி எழுந்தது. மேலும், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஏன் மோடி இன்னும் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க வரவில்லை என்று கேள்வி இருந்தார்.
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க இன்று பிரதமர் மோடி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications