தமிழகத்தில் அதிமுக-திமுகவுக்கு மாற்று கிடையாது: 53.4% மக்கள் இப்படித்தான் சொல்கிறார்கள்!
சென்னை: அதிமுக-திமுகவுக்கு மாற்று சக்தி கிடையாது என்று 50 விழுக்காடுக்கும் மேற்பட்டோர் கூறியுள்ளதாக லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக லயோலா கல்லூரி கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டசபை தொகுதிகளில் கடந்த 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 3,320 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

மாற்று இல்லை
இதில் கருத்து கூறியுள்ள 53.4 சதவீதம் மக்கள், திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்று சக்தி தமிழகத்தில் இல்லை என்று கூறியுள்ளனர். பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள், திராவிட கட்சிகளுக்கு தாங்கள்தான் மாற்று என்று கூறிவரும் நிலையில், இக்கருத்துக் கணிப்பு அக்கட்சிகளின் திட்டத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

உறுப்பினர் பலம்
சுமார் ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுகவையும், அதற்கு போட்டிகொடுக்கும் உறுப்பினர்களை கொண்ட திமுகவையும் தாண்டி தமிழகத்தில் வேறு கட்சிகள் வளரும் சூழ்நிலை இன்னும் முழுமையாக இல்லை என்பதை இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

திமுக 2வது இடம்
அதிமுகவுக்கு அடுத்தபடியாக திமுகவுக்குதான் அதிக மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதை வைத்து பார்க்கும்போது, மக்கள் இவ்விரு கட்சிகளில் ஒன்றுக்குதான் வாக்களிக்க தீர்மானித்திருப்பது தெரிகிறது.

மாறலாம்
தேமுதிக, காங்கிரஸ், மதிமு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரண்டால் இந்த நிலைமை மாறவாய்ப்புள்ளது. ஆனால், திராவிட கட்சிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழ் தேசிய கட்சிகள் இன்னும் தீவிரப்படுத்தவில்லை என்பதை இந்த கருத்துக் கணிப்பு உணர்த்துகிறது.












Click it and Unblock the Notifications