புதுவையிலும் நாம் தமிழர் தனித்து போட்டி: விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுவை: புதுச்சேரி சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 28 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழன் மீரான் நேற்று தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களை கடலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஒரே மேடையில் ஏற்றி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். கடலூரில் தான் போட்டியிடுவதாகவும் சீமான் அறிவித்தார்.

இந்நிலையில் புதுவையிலும் நாம் தமிழர் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழன் மீரான் கூறுகையில், வருகிற சட்டசபை தேர்தலில் புதுவை மாநிலத்தில் மாகி, ஏனாம் பிராந்தியங்களை தவிர்த்து மற்ற 28 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஒப்புதலை பெற்று விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
தேர்தலில் தனி மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு முன்னுரிமை அளிப்போம். மாகி, ஏனாம் போன்ற பிற மொழி பேசும் தொகுதிகளை அந்தந்த மொழி வழி மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் படையெடுப்பு, மதுவினால் மக்கள் அடையும் இன்னல்கள் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளோம் என்று கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications