"தமிழகத்தையே மாற்றுவோம்".. நாளை 234 வேட்பாளர்களையும் அறிவிக்கிறது நாம் தமிழர்
சென்னை: நாம் தமிழர் கட்சி தனது 234 வேட்பாளர்களையும் நாளை மக்களுக்கு அறிவித்து அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தத் தகவலை நாம் தமிழர் தலைவர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் அறிவித்தார். கடலூரில் நாளை மாலை இந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
நடைபெறுகிறது.
வரும் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் அது அறிவித்துள்ளது.
இந்த நிலையில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நாளை கடலூரில் நடைபெறவுள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.

கடலூரில் அறிமுகக் கூட்டம்
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், 234 தொகுதிகளுக்கும் நாளை வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவர். கடலூரில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும்
தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி அதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

திமுக, அதிமுகவால் மாற்றம் வராது
அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளாலுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. அக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ள மற்ற அரசியல் கட்சிகளாலும் அது சாத்தியப்படாது. நாம் தமிழர் கட்சியால் மட்டுமே தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

எங்கள் நாட்டில் எங்கள் ஆட்சியே
எங்கள் திருநாட்டில் எங்கள் நல் ஆட்சியே, தலைநகரை மாற்றுவோம், தமிழகத்தையே மாற்றுவோம் என்கிற முழக்கங்களுடன் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

மாற்றம் வரும்
நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம். கடலூரில் நாளை நடக்கும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களும் தோன்றுகிறார்கள்.

மூணாறிலும் போட்டி
தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள மாநிலம் மூணாறு சட்டசபைத் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது என்று கூறினார் சீமான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications