இங்கிட்டு நாட்டாமை அணி, அங்கிட்டு விஷால் அணி: தூள் பரக்கும் நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரம்
சென்னை: நடிகர் சங்க தேர்தலில் இரண்டு அணிகள் களத்தில் இருப்பதால் பரபரப்பாக உள்ளது.
நடிகர் சங்க தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இந்நிலையில் வரும் 18ம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், விஷால் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இரண்டு அணிகள் களத்தில் உள்ளதால் தேர்தல் சூடு பிடித்துள்ளது.
கடந்த 2009 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலின்போது சரத்குமார் போட்டியின்றி சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ராதாரவி பொதுச் செயலாளராக இருந்தார்.

சரத்குமார்
தற்போதைய தேர்தலில் சரத்குமார் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். ராதாரவி பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கான வேட்பாளரான சிம்புவை அறிவிக்க உள்ளார்களாம்.

விஜயகுமார்
சரத்குமார் அணியில் இரண்து துணைத்தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார் மற்றும் மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மகன் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மேலும் குயிலி, குண்டு கல்யாணம், தியாகு, நளினி ஆகியோர் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகிறார்கள்.

விஷால்
எதிர் அணியில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச் செயலாளர் பதவிக்கும், பொன்வண்ணன் அல்லது கருணாஸ் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர். கார்த்தி துணைத் தலைவர் பதவிக்கும், குஷ்பு முக்கிய பதவிக்கும் போட்டியிடுகிறார்களாம்.

ஆதரவு
நாடக நடிகர்கள் வசம் தான் அதிக வாக்குகள் உள்ளதால் இரு அணயினரும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களின் ஆதரவை திரட்டியுள்ளனர். முதல் கட்டப் பிரச்சாரத்தை முடித்த இரண்டு அணிகளும் தற்போது அடுத்த கட்ட பிரச்சாரத்தை துவங்க உள்ளன.

போட்டி
விஷால் அணியும், சரத்குமார் அணியும் போட்டி போட்டுக் கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றன. இந்த போட்டியால் நடிகர் சங்க தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications