டெல்லி துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நஜீப் ஜங் யார்? என்னென்ன செய்துள்ளார்?
டெல்லி துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நஜீப் ஜங் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை: டெல்லி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து திடீரென ராஜினாமா செய்த நஜீப் ஜங், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாவார். மேலும், அவரின் பணிகள், பொறுப்புக்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
டெல்லியில் 1951ஆம் ஆண்டு பிறந்து வளர்ந்த நஜீப் ஜங், பின்னாளில் டெல்லியின் கவர்னராகவே நியமிக்கப்பட்டார். 65 வயதான அவர் ஐஏஎஸ் தேர்வு எழுதி 1973ல் ஆட்சிப் பணியில் சேர்ந்து மத்திய பிரதேசத்தில் பணியாற்றினார்.

இதுதவிர, 1994 முதல் 1999ம் ஆண்டு வரை பெட்ரோலியத் துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியுள்ள அவர், கான்பூர் ஐஐடி கல்வி நிறுவனத்திலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டு வரை பணியாற்றினார். பின்னர், அதிலிருந்து ராஜினாமா செய்த நஜீப் ஜங், 2013ம் ஆண்டு ஜுலை மாதம் டெல்லியின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதல் செய்து கொண்டே இருந்த நஜீப் ஜங் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications