ஸ்ரீ வைகுண்டத்தில் மறியல்... நல்லக்கண்ணு, சுப.உதயகுமார் கைது
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, சுப.உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரக்கோரி இன்று கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் தூர்வார வேண்டும், அணையின் மதகுகளை பராமரிக்க வேண்டும், தூர்வாரும் இடத்தில் அந்நியர்கள் வரக்கூடாது என்று வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நல்லக்கண்ணு, சுப.உதயகுமார் உட்பட 250 பேர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications