உறவினர்களுக்கு கடிதம் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த நாமக்கல் சுப்பிரமணியம்
உறவினர்களுக்கு கடிதம் அனுப்பி வைத்துவிட்டு விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டாராம்.
சென்னை: உறவினர்களுக்கு கடிதம் அனுப்பிவிட்டுதான் வில்லங்க விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமியாக கருதப்படுவர் நாமக்கல் சுப்பிரமணியம். இதனால் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போது நாமக்கல் சுப்பிரமணியம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

ஆவணங்கள் பறிமுதல்
இச்சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. பின்னர் வெளிநாட்டில் இருந்து சுப்பிரமணியம் வரவழைக்கப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டார்.

நெருக்கடியில் சுப்பிரமணியம்
வருமான வரித்துறை அதிகாரிகள், சுப்பிரமணியத்தை அப்ரூவராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளானார் சுப்பிரமணியம்.

சனிக்கிழமையே கடிதம்
இந்த நிலையில்தான் உறவினர்கள் சிலருக்கு கடிதம் ஒன்றை சனிக்கிழமையன்று அனுப்பி வைத்திருக்கிறார் சுப்பிரமணியம். அதில் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு நான் எடுக்கப் போகும் முடிவுகளுக்கு இவர்களே காரணம் என குறிப்பிட்டிருக்கிறார்.

தற்கொலை
இக்கடிதம் திங்களன்று உறவினர்கள் கைக்கு போகும் முன்னர் அன்று காலையிலேயே தற்கொலை செய்து கொண்டார் சுப்பிரமணியம். இக்கடித விவரங்களை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications