நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்... மீண்டும் இன்று தொடங்குகிறார் ஸ்டாலின்
சென்னை: தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மூலம் மக்களை சந்தித்து வரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மீண்டும் தனது பயணத்தை சென்னையில் இன்று தொடங்குகிறார்.
தமிழகத்தில் இந்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம்' என்ற பெயரில் ஸ்டாலின் மக்களை சந்தித்து வருகிறார். இந்த பயணம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் முடிவடைந்து விட்டது. 31 மாவட்டங்களில் உள்ள 212 சட்டமன்ற தொகுதிகளில் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து உள்ளார். 3 கட்டங்களாக நடந்த பயணம் கடந்த நவம்பர் 6ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் நிறைவடைந்தது.
இதனிடையே சென்னையில் பெய்த பெரு மழை காரணமாக நமக்கு நாமே பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நமக்கு நாமே பயணம் ஜனவரி முதல் வாரம் முதல் பிப்ரவரி கடைசி வரை சென்னையில் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அதன்படி சென்னையில் நமக்கு நாமே பயணம் இன்று தொடங்குகிறது.
முதல் நிகழ்ச்சி சென்னை ஆர்கே. நகர் தொகுதியில் உள்ள நேதாஜி நகர் நாடார் உறவின் முறை மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி












Click it and Unblock the Notifications