கிருஷ்ணசாமியின் மரணம்: பாஜகவிற்கு எதிராக போராட்டம்.. திருவாரூரில் மோடியின் உருவ பொம்மை எரிப்பு
கேரளாவில் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் இறப்பிற்கு மத்திய அரசும், மோடியும்தான் காரணம் என்று தமிழகம் முழுக்க போராட்டம் நடந்து வருகிறது.
Recommended Video

சென்னை: கேரளாவில் மரணம் அடைந்த கிருஷ்ணசாமியின் இறப்பிற்கு மத்திய அரசும், மோடியும்தான் காரணம் என்று தமிழகம் முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. திருவாரூரில் சில இடங்களில் மோடியின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனிதா உயிரை பலி வாங்கிய அதே நீட் தற்போது இன்னொரு உயிரையும் பலி வாங்கியுள்ளது. நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்து சென்ற கிருஷ்ணசாமி என்பவர் மாராடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

இந்த விஷயம் தமிழகத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு மீது மக்கள் பெரிய கோபத்தில் இருக்கிறார். எப்போதும் போல முதுகெலும்பற்று, செயலாற்றாமல் இருக்கும் மாநில அரசு மீதும் மக்கள் பெரிய கோபத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் கிருஷ்ணசாமி மரணத்துக்கு மத்திய அரசுதான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூரில் போராட்டம் நடத்தி வருகிறது. கட்சியினர் மட்டுமில்லாமல் ஏராளமான பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் மோடியின் கொடும்பாவி எரிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் அருகே இருக்கும் விளாக்குடியிலும் மோடி கொடும்பாவி எரித்து மார்க்சிஸ்ட் போராட்டம் நடத்தியது.
இதை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் நீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்து வருகிறது. 100க்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். தமிழக வாழ்வுரிமை கட்சியினர் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications