நீதிபதினு தெரியாமல்.. டிக்கெட்டிற்கு ரூ.5 கூடுதலாக கேட்ட நடத்துநர்! கோர்ட்டுக்கு வரவழைத்து வார்னிங்!
நெல்லை: நெல்லையில் அரசு பேருந்தில் நீதிபதி பயணிப்பதை அறியாமல் பயணிகளிடம் டிக்கெட்டுக்கு கூடுதலாக ரூ.5 வசூலித்த நிலையில் நடத்துநரை நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பேருந்து நேற்றைய தினம் கிளம்பியது. அப்போது அந்த பேருந்தில் நாங்குநேரியை சேர்ந்த பார்வதிநாதன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளனர்.

பார்வதிநாதன் உள்ளிட்டோர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு நுகர்வோர் வழக்கு தொடர்பாக வாய்தாவுக்காக சென்றுள்ளனர். அரசு பேருந்தில் மேற்கண்ட வழித்தடத்தில் சென்றால் நெல்லை நீதிமன்றத்திற்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இந்த பேருந்தில் இருந்த நடத்துநர் ரூ.10க்கு பதிலாக ரூ.15 பயணச்சீட்டை கொடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ந்த பார்வதிநாதன் உள்ளிட்டோர் ரூ.10 பயணச்சீட்டுத்தானே கொடுக்க வேண்டும், எதற்காக ரூ.15 பயணச்சீட்டை கொடுக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பார்வதிநாதன் உள்ளிட்டோரை குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே பேருந்திலிருந்து கீழே இறங்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. அப்போது அந்த பேருந்தில் இருந்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் அங்கு நடந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டே இருந்தார்.
அவர் யார் என தெரியாமல் அவரிடமும் ரூ.10 பெற்றுக் கொண்டு ரூ.15 பயணச்சீட்டை நடத்துநர் கொடுத்துள்ளார். நீதிமன்றம் நிறுத்தம் வந்ததும் பேருந்தில் இருந்து பிளஸ்ட் இறங்கிவிட்டார். இதையடுத்து நீதிமன்ற அறையில் போக்குவரத்து கழக அதிகாரிகளை வரவழைத்து பார்வதிநாதன் உள்ளிட்டோரையும் வரழைத்து நடந்தவற்றை கூறுமாறு தெரிவித்தார்.

இதே போல் தொடர்ந்து கொண்டிருந்தால் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். நேற்று பேருந்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பயணி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவாக எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பேருந்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக ஓட்டுநர், நடத்துநர், போக்குவரத்து அதிகாரிகள் மீது வழக்கு தொடர போவதாக பார்வதிநாதன் தெரிவித்தார்.
வந்திருப்பது நீதிபதி என தெரியாமல் அவரிடமே கூடுதல் கட்டண பயணச்சீட்டை நடத்துநர் ஒப்படைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போல் நடத்துநர் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications