நெல்லை: காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை! எக்ஸிட்போல் முடிவால் வேதனை!!
நெல்லை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், மனமுடைந்த நெல்லை காங்கிரஸ் பிரமுகர், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நெல்லை அடுத்த பேட்டையை சேர்ந்தவர் அருணாசலம் வயது 40. இவருக்கு ஆறுமுக செல்வி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அருணாசலம், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தின் பொறுப்பாளராக உள்ளார்.
நேற்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை அருணாசலம் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது, காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும், ராகுல்காந்தியின் வெற்றி வாய்ப்பும் இழுபறி நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதை பார்த்தது முதல் அவர் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை அருணாசலம் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அருணாசலம் மறைந்த செய்தியை கேட்டு, நெல்லை காங்கிரஸ் பிரமுகர்களும் தொண்டர்களும் அவரது வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு எதிரொலியாக காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், நெல்லையில் காங்கிரஸ் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications