For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காகாரன் ஏதாவது புது மருந்து கண்டுபுடிச்சிடேன்னு உங்க கிட்ட சொன்னானா? நெட்டிசன்ஸ் காட்டம்

நிலவேம்பு கஷாயம் கொடுக்க வேண்டாம் என்று கூறிய நடிகர் கமலுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: சரியான ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் கொடுக்க வேண்டாம் என்று கூறிய நடிகர் கமலுக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அண்மையில் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்திய நடிகர் கமல்ஹாசன் பொதுமக்களுக்கு தனது ரசிகர்கள் நிலவேம்பு கஷாயம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிலையில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை தனது ரசிகர்கள் மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் கொடுக்க வேண்டாம் என கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சொல்லத் தைரியமிருக்கா?

அதென்ன சித்த வைத்தியருங்க சொன்னா மட்டும் ஆராய்ச்சி பண்ணனும்? ஏன் மற்ற மருந்தும் ஆராய்ச்சி பண்ணிட்டு குடிங்கன்னு சொல்லத் தைரியமிருக்கா? என கேட்கிறது இந்த டிவிட்

டெங்கு காத்திருக்காது

ஆராய்ச்சி முடியும்வரை டெங்கு காத்திருக்காது ஆண்டவா என்கிறார் இந்த நெட்டிசன்

கன்ட்ரோல் ஆகல!

ஏனாம்?! நிலவேம்பு கசாயம் குடிச்சாதான் டெங்கு குணமாகுது டேப்லெட், ஊசிக்கு காய்ச்சல் கன்ட்ரோல் ஆகல! என கூறுகிறார் இந்த வலைஞர்..

யாரு கொடுக்கறாங்க?

உங்கள் இயக்கத்தினர் பாய்ந்து பாய்ந்து தான் குடுத்துட்டு இருக்கானுங்க.. என கூறுகிறார் நெட்டிசன்...

எதிர்க்கும் நிலையில் இருக்கிறீர்

இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது, அரசு எதைச் செய்தாலுமே கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் நிலையில் இருக்கிறீர்... என்கிறது இந்த டிவிட்

டெங்குவும் காத்திருக்க வேண்டும்

ஆம் அதுவரை இயக்கத்தார் மாதிரி டெங்குவும் காத்திருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.. என்கிறது இந்த டிவிட்

புது மருந்து கண்டுபிடிச்சிட்டானா

ஏன் அமெரிக்காகாரன் ஏதாவது புது மருந்து கண்டுபுடிச்சிடேன்னு உங்க கிட்ட சொன்னானா.. என கேட்கிறார் இந்த வலைஞர்

English summary
Actor Kamal said his fans do not give Nilavembu juice to public. Netizens opposing Kamal haasan on this issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X