நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம் பங்கேற்றாரா? வெடிக்கும் புதிய சர்ச்சை
நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ. பங்கேற்றாரா? என்பது குறித்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் கந்தர்வகோட்டை அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம் பங்கேற்றாரா? என புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவின் கவனத்துக்கும் திமுக கொண்டு சென்றுள்ளது.
சட்டசபையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். ஓபிஎஸ் அணிக்கு 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் கிடைத்தது.

குமாரசாமி கணக்கா?
திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது. தற்போது அதிமுகவுக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்பதே 'குமாரசாமி' கணக்கு என ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

ஆறுமுகம் எம்.எல்.ஏ.
கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவர் தொடர்ந்தும் மருத்துவமனையில் உள்ள நிலையில் அவர் சட்டசபைக்கு வந்திருக்க வாய்ப்பில்லை.

பதில் வரவில்லை..
அப்படியான நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவு 121 ஆகத்தானே இருக்க முடியும்; அதெப்படி 122 ஆக இருக்கும்? என ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்த சர்ச்சை காலை முதல் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. இதுவரை கந்தர்வகோட்டை ஆறுமுகம் தரப்பில் எந்த பதிலும் வரவில்லை.

ஆளுநரிடம் புகார்
இதனிடையே கந்தர்வகோட்டை ஆறுமுகம் விவகாரம் குறித்து ஆளுநரின் பார்வைக்கு திமுக கொண்டு சென்றுள்ளது. இது தொடர்பாக தாமும் விசாரிப்பதாகவும் உங்களுக்கு கூடுதல் தகவல் கிடைத்தால் தம்மிடம் பகிர்ந்து கொள்ளுமாறும் திமுக தரப்பிடம் ஆளுநர் கூறியுள்ளாராம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications