பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றாரா ஓவியா? சமூக வலைதளங்களில் தீயாக பரவும் வதந்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாக பரவி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் பொய் சொல்லாதவர், பிறருக்கு தீங்கு நினைக்காதவர் என்றால் அது ஓவியாதான். இதன் காரணமாகவே தமிழ் ரசிகர்கள் அவரை தூக்கிப்பிடித்து வருகின்றனர்.

ஓவியா தன்னிடம் அன்புக்காட்டிய சக போட்டியாளரான ஆரவை காதலிப்பதாக கூறினார். ஆனால் ஓவியாவை காதலிக்கவில்லை, அவர் மீது இருப்பது வெறும் சாஃப்ட் கார்னர் தான் என கூறி நழுவினார் ஆரவ்.

 தற்கொலைக்கு முயன்றாரா?

தற்கொலைக்கு முயன்றாரா?

இந்நிலையில் காதல் தோல்வியில் ஓவியா பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலை முயற்சியால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று தகவல் பரவி வருகிறது.

 வெறும் வதந்தி

வெறும் வதந்தி

ஆனால் இதனை மறுத்துள்ள ஓவியா ஆர்மிக்காரர்கள் ஓவியா தற்கொலை முயற்சி வெறும் வதந்தி என தெரிவித்துள்ளனர். வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இதுகுறித்த சில டிவீட்கள் உங்கள் பார்வைக்கு..

தெளிவுப்படுத்துங்கள்

விஜய் டிவி ஓவியா பற்றி பரவும் வதந்திகளை தெளிவுப்படுத்துங்கள்.. என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்..

குண்டர் சட்டம் பாயும்

வருங்கால முதல்வர் ஓவியா தொடர்பாக வதந்திகள் பரப்புவோர் மீது குண்டர் சட்டம் பாயும். சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை. என்கிறார் இந்த நெட்டிசன்

குண்டுமணி அளவு ரத்தம்..

ஓவியா ஆர்மி : என் கட்சிக்காரன் கால் சுண்டுவிரலிலே குண்டுமணி அளவு ரத்தம் வந்தாலும் சரி, எதிர்க்கட்சிக்காரன் தலை தோரணம் கட்டி தொங்கவிடப்படும்!! என்கிறது இந்த டிவிட்

ஓவியா ஆர்மி தட்டிகேட்கும்

ஓவியாக்கு என்ன அநியாயம் நடந்தாலும் ஓவியா ஆர்மி தட்டி கேட்கும் என்கிறது இந்த டிவிட்

தேடி அடிக்கிற ஆள்

ஓவியா ஓடி ஒளியிர ஆள் இல்லை , தேடி அடிக்கிற ஆள் என்கிறது இந்த மீம்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A news spreading in social networks that Oviya committed suicide attempt.But some of the people saying that is a rumor.
Please Wait while comments are loading...