லலித்குமார் எப்படிப்பட்டவர் தெரியுமா.. இருவரும் பேசிய முக்கிய ஆடியோவை வெளியிட்ட நிலானி!
Recommended Video

சென்னை: நடிகை நிலானியிடம், துணை இயக்குநர் லலித்குமார் ஏடிஎம் கார்டு, பாஸ்புக் கேட்டு மிரட்டும் ஆடியோக்களை நிலானி வெளியிட்டுள்ளார்.
துணை இயக்குநர் லலித்குமார் மற்றும் சின்னத்திரை நடிகை நிலானி காதலித்தனர். ஆனால் லலித்குமார், நிலானியை தொடர்ந்து பல்வேறு தொல்லைகளுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசில் நிலானி புகார் அளித்தபிறகு, லலித்குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், நிலானி திடீரென தலைமறைவானார். பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

தற்கொலை முயற்சி
லலித்குமார் செய்த கொடுமைகளால் அவரை விட்டு விலகியதாகவும், அவர் தற்கொலைக்கு நான் எப்படி காரணமாக முடியும் என்றும் கேட்டார். ஆனால், லலித்குமார் சகோதரர் நிலானியை குற்றம்சாட்டினார். இதையடுத்து நிலானி நேற்று கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆடியோ
இந்த நிலையில், லலித்குமாருடன் பேசி, நிலானி வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்கு வெளியே நின்றபடி, நிலானியின் ஏடிஎம் கார்டு, வங்கி பாஸ்புக்கை வெளியே போடும்படி லலித்குமார் கேட்கிறார். அதற்கு நிலானி மறுப்பு தெரிவிக்கிறார். "ஏடிஎம் கார்டு, பாஸ்புக் தர முடியாது" என நிலானி கூற, "கீழேதான் உள்ளேன், அதை எட்டி போடு. உனக்கு என்ன ஆகிவிடும்" என்கிறார் லலித்குமார்.

பொய் முகம்
அப்போது போலீசுக்கு நிலானி போன் செய்வது போன்ற ஆடியோ கேட்கிறது. பொய்யான முகம் காட்டி ஒருவர் எனது வாழ்க்கையில் வந்தார். ஆனால் பொய் முகம் தெரிந்ததால், விலகினேன். ஆனால் தினமும் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதற்காக நான் கையை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளேன். ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் செய்யுங்கள். இவ்வாறு நிலானி போலீசில் கெஞ்சுகிறார்.

இறங்க காரணம்
பின்னர் லலித்குமாரிடம், நிலானி பேசுகிறார். ஆரம்பத்தில் இருந்து நீ என்னை ஏமாற்றி வாழ்ந்து கொண்டுள்ளாய். நீ தற்கொலை செய்து கொண்டுவிட கூடாது என்பதற்காகத்தான் நான் இவ்வளவு இறங்கி வந்து கொண்டுள்ளேன் என்கிறார் நிலானி. நீ வெறும் ஏடிஎம் மற்றும் பாஸ்புக் மட்டும் கொடு என்று பதிலுக்கு விடாமல் கேட்கிறார் லலித்குமார்.

கடும் வாக்குவாதம்
இதற்கு, நிலானி, போலீசில் ஏடிஎம், பாஸ்புக் கொடுக்கிறேன். நீயே செக் செய்து கொள். உனக்கு தெரியாமல் 5000 சேர்த்து வைத்திருந்தால் கூட அதில் தெரியும் என்கிறார். அதற்கு உனக்கு போலீஸ் ஸ்டேஷன் போவது புதிதா என்கிறார் லலித்குமார். உனக்கு சிறைக்கு போறது புதுசா என்கிறார் நிலானி. நான் ஏதோ விபச்சார வழக்கில் அடிக்கடி சிறை சென்றது போல கேட்கிறாயே என்று கூறும் நிலானி, நீ ஒரு சைக்கோ, ஒருவரை 4 நாட்கள் சந்தோஷமாக வைத்திருக்க தெரியாது என்றும் கூறுகிறார். இவ்வாறு வாக்குவாதம் தொடருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications