நிர்மலா பெரியசாமி பொறுப்புள்ள பேச்சா? "மடையர்களை, வெட்டி போடுங்க" அதிமுக நட்சத்திர பேச்சாளரா இப்படி
கள்ளக்குறிச்சி: நேற்றைய தினம் அதிமுக, திமுக கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் சர்ச்சை கருத்துகள் வெடித்துள்ளன.. செங்கல்பட்டு கூட்டத்தில் திமுக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கள்ளக்குறிச்சி அதிமுக கூட்டத்தில் பேச்சாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் சர்ச்சை பேச்சுகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது.. இந்த இரு பிரபலங்களின் பேச்சுக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..
செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக கட்சி சார்ப்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.. இதில், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர்,

யார் கையில் மாங்காய்
யார் கையில் மாங்காய் இருக்கிறது என்று தெரியவில்லை. இப்போது அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் ஏஜெண்டாக ஆக அன்புமணி ராமதாஸ் இருக்கிறார். அன்புமணி ராமதாஸ் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக மத்திய அமைச்சராக இருந்தது கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை.
அன்புமணி ஊழல்
மத்திய அமைச்சராக அன்புமணி இருந்தபோது ஊழல் செய்துள்ளார். அவர் மீது சிபிஐ வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது. அப்படியிருக்கும்போது, அவரே திமுகவை ஊழல்வாதி என்று குற்றம் சாட்டுகிறார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயத்தில் அமித்ஷாவின் உத்தரவின் பெயரில் கூட்டணியில் இணைந்துள்ளார்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்..
இதுதான் தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது.. மத்திய அமைச்சராக அன்புமணி இருந்தபோது ஊழல் செய்ததாக சொல்வது யாருடைய ஆட்சி காலத்தில்? யாருடைய கூட்டணியில்? என்று எதிர்க்கட்சிகள் சோஷியல் மீடியாவில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்..
அதிமுக நிர்மலா பெரியசாமி
அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வாழவந்தான்குப்பத்தில், சேலம் - சென்னை புறவழிச்சாலை பகுதியில் அதிமுக மகளிரணி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்த கூட்டத்தில், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளரான நிர்மலா பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்..
வெட்டியே போடுங்கள்
அப்போது அவர் பேசும்போது, வழக்கம்போலவே திமுக அரசை சாடினார்.. தொடர்ந்து அவர் உரையாற்றும்போது, எவனாவது வெளியில் அண்ணா திமுக பலவீனமாக இருக்கிறது என்று எவனாவது சொன்னார்கள் என்றால், வெட்டியே போடுங்கள் அத்தனை பேரையும்..
டிவியில் உட்கார்ந்துட்டு அதிமுக அப்படி ஆகிவிட்டது, அதிமுக இப்படி ஆகிவிட்டது, அவன் அங்கே போய்விட்டான். இவன் இங்கே போய்விட்டான்... அவன் ஓடிப் போய்விட்டான் என்றெல்லாம் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்கள்.. இப்படி பேசி அதிமுக பலவீனமாக இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்..
மடையர்கள் - நட்சத்திர பேச்சாளர்
அந்த மடையர்களுக்கெல்லாம் சொல்லுங்கள், நாங்கள் இருக்கிறோம். அம்மாவின் தங்கைகள், அம்மாவின் பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம்... எங்கள் சகோதரர் இருக்கிறார். அம்மா சும்மா விட்டுப் போகவில்லை...
அம்மா அருமையான ஒரு தம்பியை, தன்னை போலவே ஒரு தம்பியை அருமையாக உருவாக்கிவிட்டு இரும்பு மனமும், கரும்பு இதயமும் கொண்ட ஒரு அண்ணனை உருவாக்கி விட்டுத்தான் போயிருக்கிறார். அதிமுக சோடை போகாது. அடுத்து ஆட்சி அமைக்க போகிறது" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
மேடையிலேயே வன்முறையை தூண்டும் வகையிலும், ஒருமையிலும், நிர்மலா பெரியசாமி பேசியதை கேட்டு, கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.. இன்னும் தேர்தலுக்கு பிரச்சாரமே துவங்காத நிலையில், நிர்மலா பெரியசாமி இப்படி கடினமான வார்த்தையை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது..
-
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications