உன் மகள் காதலித்து எங்காவது ஓடியிருப்பார் என்றனர் போலீஸார்: என்ஜினியர் உமாவின் தந்தை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வாழப்பாடியில் குடும்பத்தோடு வசித்தும் வரும் பாலசுப்ரமணியம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஓவிய ஆசிரியராக உள்ளார். அவரது மகள் உமா மகேஷ்வரி சென்னையில் தங்கி டி.சி.எஸ். நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தனது அலுவலகம் அருகே பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் மகளுக்கு ஏற்பட்டது போன்று வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. எங்கள் மகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அதற்கு அவர்கள் உங்கள் மகள் காதல் விவகாரத்தில் எங்காவது ஓடியிருப்பார், பொறுமையாக இருங்கள் கண்டுபிடிக்கலாம் என்று மெத்தனமாக பதில் அளித்தனர்.
சிப்காட் வளாகத்தை சுற்றி நன்கு சோதனை செய்யுமாறு எனது உறவினர்கள் வலியுறுத்தினார்கள். அதன்பேரில் சோதனை நடத்தியபோது தான் என் மகள் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உமாவை அருப்புக்கோட்டையில் இருக்கும் எனது உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இறுதிச் சடங்கையாவது அருப்புக்கோட்டையில் செய்யலாம் என்று தான் என் மகளின் உடலை அங்கு கொண்டு சென்று தகனம் செய்தோம். குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications