சென்னை, திருச்சியில் காலையிலேயே வெளுத்து வாங்கிய மழை - மக்கள் மகிழ்ச்சி
சென்னை, திருச்சியில் காலை முதலே மழை வெளுத்து வாங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Recommended Video

சென்னை: வடகிழக்குப் பருவமழையின் தொடக்கமாக சென்னையிலும் திருச்சியிலும் காலை முதலே பலத்த மழை பெய்தது.
காலையிலேயே ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தியாகராய நகர், சைதாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. அரைமணிநேரம் பெய்த பலத்த மழையால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
தென்மேற்கு பருவமழை நிறைவடைந்ததையொட்டி, வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், வடகிழக்கு திசை காற்று தமிழகத்தில் முழுமையாக வீசாததால் பருவமழை தொடங்குவது தாமதம் ஆனது.
வழக்கமாக நமது நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆ தேதி துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஒருவார காலம் தாமதமாக அக்டோபர் 26ஆம் தேதி தான் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இருப்பினும் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை.

தாமதமாக தொடங்கிய பருவமழை
வடகிழக்கு திசை காற்று தமிழகத்தின் வளிமண்டலத்தில் வீசுவதாலும், மிதமான மழை பரவலாக பெய்து இருப்பதாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

தமிழகம், புதுவையில் பருவமழை
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழைக்கான கிழக்கு திசை காற்று தமிழகம் முழுவதும் பரவி, தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது.

வடகிழக்கு பருவமழை
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தென் இந்திய பகுதிகளுக்கு இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும்.

மழை வலுவடைய வாய்ப்பு
தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய வடகிழக்கு திசை காற்றின் வலு 28ஆம் தேதியும் 29ஆம் தேதியும் குறைவாக இருக்கும். அதன்பிறகு, வருகிற 30, 31ஆம் தேதிகளில் வடகிழக்கு திசை காற்று வலுப்பெற்று மழை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
காலையில் பெய்த மழை
காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென்று பலத்த மழை கொட்டியது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தியாகராய நகர், சைதாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்தது. இது எதிர்பாராத மழைதான் என்றும் அக்டோபர் 30க்குமேல்தான் சென்னையில் மழை கொட்டும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் மழையால் வெள்ளம்
திருச்சி,ஸ்ரீரங்கம் பகுதியில் காலை முதலே பலத்த மழை பெய்தது, கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வடகிழக்குப் பருவமழை திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications