திருப்பூர் ராஜீவ் காந்தி சிலையை நாங்கள் சேதப்படுத்தவில்லை- சீமான்

Subscribe to Oneindia Tamil

NT has no link in Rajiv statue damage, says Seeman
சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியினருக்குத் தொடர்பு இல்லை என்று அக்கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் சிலை உடைக்கப்பட்ட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சிக்கு எவ்விதத் தொடர்பும் கிடையாது. சிலை உடைப்பு போன்ற அத்துமீறிய காரியங்களில் நாம் தமிழர் கட்சித் தம்பிகள் ஒருபோதும் ஈடுபடுவது கிடையாது.

எத்தகைய எதிர்ப்பையும் ஜனநாயக முறையில் மட்டுமே தெரிவிக்கத் தெரிந்து வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சித் தம்பிகளை ராஜீவ் காந்தி சிலை தகர்ப்பு விவகாரத்தில் சம்பந்தப்படுத்திப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

இனத்தில் விழுந்த ரணங்களை எல்லாம் மனத்தில் சுமக்கும் எங்கள் பிள்ளைகள் அறவழியில் நின்றே எத்தகைய உரிமைக்குரல்களையும் எழுப்புவார்கள்.

திருப்பூர் ராஜீவ் காந்தி சிலை தகர்ப்புக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எவ்வித்தத் தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலமாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார் சீமான்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+