முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பி.எஸ்.!
சென்னை: தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ரோசையா ஏற்றுக் கொண்டார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனாம் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். தற்போது கர்நாடகா உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.
இதனால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்காக இன்று காலை நடைபெற்ற அண்ணா திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஜெயலலிதா, சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் பின்னர் ஆளுநர் ரோசையாவை நேரில் சந்தித்த பன்னீர்செல்வம் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ரோசையா ஏற்றுக் கொண்டார்.
கடந்த 2001ஆம் ஆண்டு டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட போதும் இதேபோல் முதல்வர் பதவியை தற்காலிகமாக பன்னீர்செல்வம் வகித்து வந்தார். பின்னர் ஜெயலலிதா அந்த வழக்கில் விடுதலையானதும் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2வது முறையாக முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications