விடாது கருப்பு... அதிமுக கணக்குகளை முடக்க கோரி வங்கிகளுக்கு ஓபிஎஸ் அதிரடி கடிதம்!
அதிமுகவின் கணக்குகளை முடக்கக் கோரி வங்கிகளுக்கு முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்குகளை முடக்கக் கோரி வங்கிகளுக்கு அதிமுக பொருளாளர் என்ற அடிப்படையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக கடிதம் அனுப்பியுள்ளார்.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்காலிக பொதுச்செயலராக உள்ள சசிகலாவுக்கு தம்மை நீக்கும் அதிகாரம் இல்லை என கூறி வருகிறார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

தற்போதைய நிலையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா, ஓபிஎஸ் தலைமையில் இரு அணிகளாக உடைந்து போயுள்ளது.
இந்த நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு அதிமுகவின் பொருளாளர் என்ற அடிப்படையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், அதிமுக பொருளாளராகிய என்னுடைய அனுமதி இல்லாமல் அதிமுக வங்கி கணக்குகளில் எந்த பரிவர்த்தனையும் நடைபெற கூடாது.
அதிமுகவின் பொதுச்செயலர் பதவி காலியாகவே உள்ளது. அதிமுகவின் பொதுச்செயலர் முறைப்படி இன்னமும் தேர்வு செய்யப்படவில்லை. ஆகையால் அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications