பாலியல் ரீதியான சலுகை அளிப்பது குற்றம்.. ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம்
பாலியல் ரீதியான சலுகைகளை அளிப்பது குற்றம் என்று ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை: பாலியல் ரீதியான சலுகைகளை அழிப்பது குற்றம் என்று ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவில் லஞ்சம் பல வகைகளில் கொடுக்கப்படும். பணம் மட்டுமாக இல்லாமல் வீடு, கார், வெளிநாட்டு பயணம் என்று நிறைய வசதிகள் செய்து தரப்படும். அதேபோல் சில ஆண்கள், பெண்களை பாலியல் தேவைக்கு அழைப்பதையும் ஒரு லஞ்ச முறையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

அதாவது சில அதிகாரிகள் பணிகளை செய்ய ''பெண்கள் பாலியல் ரீதியாக உடன்பட'' வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது அடிக்கடி நடக்கிறது. தற்போது இது ஒருவகையான லஞ்சம் என்று ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
30 வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 10க்கும் அதிகமான முறை திருத்தங்களை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தற்போது இதில் புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி லஞ்சமாக பாலியல் சேவை அளிப்பதும், கேட்பதும் குற்றம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு 7 வருடம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் லஞ்சமாக வீடு வழங்குவது, உணவு வழங்குவது, வெளிநாட்டு மதுபானம் வழங்குவது, வெளிநாடு அழைத்து செல்வது ஆகியவையும் 7ஆண்டு சிறைக்குள் வரும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications