எஸ்.ஆர்.எம். பச்சமுத்து கொலை மிரட்டல் வழக்கிலும் கைது?
சென்னை: ரூ75 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பச்சமுத்து மீது கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கொலை மிரட்டல் வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக கூறி 112 பேரிடம் ரூ75 கோடி மோசடி செய்தார் பச்சமுத்து என்பது புகார். இப்புகாரின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த வெள்ளிக்கிழமையன்று பச்சமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

பச்சமுத்து தமக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே பச்சமுத்து போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சினிமா பைனான்சியர் போத்ராவுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக பச்சமுத்து மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பச்சமுத்து மீது காசோலை மோசடி புகார் கொடுத்ததால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சினிமா பைனான்சியர் போத்ரா சென்னை காவல் துறை ஆணையரிடம் 2 நாட்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தார்.
இப்புகாரின் அடிப்படையின் போத்ராவுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் பச்சமுத்து மீது பிரிவு 501இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் பச்சமுத்து மீண்டும் கைது செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications