500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற "ஒன்லி 2 டேஸ்".. நெருக்கடியில் பொதுமக்கள்.. வங்கிகளில் கூட்டம்
பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்னும் 2 நாட்களே உள்ளதால் வங்கிகளில் கூட்டம் அலை மோதும் உருவாகியுள்ளது.
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளுக்குச் சென்று மாற்றிக் கொள்ள டிசம்பர் 30ம் தேதி கடைசி நாள் என்பதால் வங்கிகளை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த மாதம் 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், மக்கள் கையில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கி, மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து புதிய நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதனையடுத்து, பொதுமக்கள் தங்கள் கையில் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகள், அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றி வந்தனர். அதுவும் நான்காயிரம் ரூபாய் வரை மட்டுமே மாற்றித் தரப்படும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். குறைந்தபட்ச பணத்தை மாற்றக் கூட நாள் கணக்கில் வங்கி வாசல்களில் மக்கள் காத்துக்கிடந்தனர். இந்தியா முழுவதும், பணத்தை மாற்ற வங்கி வாசல்களில் காத்திருந்த போது சுமார் 100 பேர் உயிரிழந்தனர்.
டிசம்பர் 30ம் தேதியோடு, பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றுவது நிறுத்தப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது, அதன்படி, பழைய நோட்டுக்களை மாற்ற இன்னும் 2 நாட்களே உள்ளன. 30 தேதிக்கு மேல் பழைய நோட்டுக்களை கையில் வைத்திருப்பது விதியை மீறிய செயலாகும் என்றும் அதன் பிறகு மாற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளதால், மக்கள் தங்கள் கையில் உள்ள பழைய நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் கூடியுள்ளனர். நாளை மற்றும் நாளை மறுதினத்திற்கு கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.
டிசம்பர் 30ம் தேதியோடு பழைய நோட்டுக்களை மாற்றுவது நிறுத்தப்படும் நிலையில், பண மதிப்பு நீக்கம் தொடர்பாக விவாதம் நடத்த இன்று டெல்லியில் அமைச்சரவை கூடுகிறது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications