போயஸ் கார்டனுக்கு விரைந்தார்.... "மக்கள் முதல்வரை"ச் சந்தித்தார் தமிழக முதல்வர்!
சென்னை: சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதாக தீர்ப்பு வெளியானதை அடுத்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து தனது முதல்வர் பதவியை இழந்தார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்
இந்தச் சந்திப்பிற்குப் பின் இன்று மாலையே ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து உடனடியாக ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications