சிரிச்சே தமிழர்களை ஏமாற்றி விட்டாரே ஓ.பன்னீர் செல்வம்!
சசிகலா முதல்வராகப் போகிறாராமே என்ற கேள்விக்கு வெறும் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அந்த புன்னகைக்கு அர்த்தம் தற்போது புரிந்து மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
சென்னை: சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளாராமே என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்க மறுத்து விட்டார். மாறாக தனது டிரேட் மார்க் புன்னகையை மட்டும் சிந்தி விட்டுப் போனார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.ஆனால் அவர் தனது முடிவை நினைத்துத்தான் சிரித்துள்ளார் என்பது இப்போது புரிந்து தமிழக மக்கள் அதிர்ந்து போய் நிற்கின்றனர்.
குறுகிய காலத்தில் 2வது முறையாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டினார் சசிகலா. இதனால் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து முதல்வர் பதவி பறி போகப் போகிறதா என்ற பெரும் பரபரப்பு கிளம்பியது. மக்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ள சசிகலா வசம் அந்தப் பதவி போய் விடுமோ என்ற அதிர்ச்சியும் மேலோங்கியிருந்தது.

இந்த நிலையில் சென்னை எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய்ப் படல பாதிப்பை ஆராய முதல்வர் இன்று வருகை தந்தார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும், சசிகலா ஆதரவு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
அப்போது செய்தியாளர் ஒருவர் சசிகலா முதல்வராகப் போகிறாராமே என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு முதல்வர் பதிலளிக்கவில்லை. மாறாக வழக்கம்போல தனது டிரேட் மார்க் வெள்ளந்தி சிரிப்பை சிந்தி விட்டு நகர்ந்தார் முதல்வர். முதல்வரின் இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்றுதான் விளங்கவில்லை...
ஆனால் தற்போது முதல்வர் பதவியை சசிகலாவிடம் சத்தமில்லாமல் ஒப்படைத்து விட்டு மறுபடியும் அதே சிரிப்புடன் அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அவர் நின்றிருந்ததைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழர்களும் அதிர்ந்து போய் நிற்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications