சசிகலா, தினகரனை ஏற்க மாட்டோம்.. ஓ.பிஎஸ் அணி எம்எல்ஏ ஆறுக்குட்டி தடாலடி!
எந்தக் காரணத்திற்காகவும் எங்கள் கோரிக்கையில் சமரசம் செய்த கொள்ள மாட்டோம் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் தங்கள் அணியால் ஆட்சி மாற்றம் ஏற்படாது என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏ ஆறுக்குட்டி கூறியுள்ளார்.
அதிமுகவின் அம்மா அணியில் எந்த நேரத்திலும் பிளவு ஏற்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்ற ரீதியில் திக் திக் நகர்வுகளாக அரங்கேறி வருகின்றன. சிறையில் இருந்து வெளியே வந்த அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை இதுவரை 32 எம்எல்ஏக்கள் சந்தித்து சென்றுள்ளனர்.

இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி நீடிக்கிறது. டிடிவி தினகரன் தன்னால் ஆட்சி கவிழாது என்று கூறியுள்ளார், ஆனால் சசிலா கொடுத்திருக்கும் 60 நாள் அவகாசத்தில் தனக்குத் தான் கட்சியில் கெத்து என்பதை நிரூபிக்க விரும்புவதால் ஒருவர் பின் ஒருவராக எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்எல்ஏ ஆறுக்குட்டி, தமிழகத்தில் தங்கள் அணியால் ஆட்சி மாற்றம் வராது என்று தெரிவித்துள்ளார். மேலும் சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. சசிகலா,தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதே ஓ.பிஎஸ் அணியின் முக்கிய கோரிக்கை அப்படி இருக்கும் போது எப்படி அவர்களை ஏற்க முடியும்.
எங்கள் அணியின் இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இணைப்பு என் பேச்சுக்கே இடமில்லை, ஆளாளுக்கு ஏதாவது ஒரு கருத்தை சொல்லி பிரச்னையை பெரிதுபடுத்துவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர், என்றும் ஆறுக்குட்டி கூறினார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications