திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் இன்று கூடுகிறது... யாருக்கு ஆதரவு?
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். சிக்கலான அரசியல் சூழ்நிலையில் இன்றைய கூட்டத்தில் முக்
சென்னை: சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டால் திமுகவின் ஆதரவு யாருக்கு என்பதை இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்நிலையில், இன்று கூடும் திமுக உயர்மட்டக்குழு கூட்டத்தையொட்டி நேற்று இரவே சட்ட வல்லுனர்களுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர்கள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இதே பிரச்னை போன்று ஹிமாச்சலா ஏற்பட்ட நிலைமையில் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து விளக்கியிருக்கிறார்கள்.

மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் முதல்வருக்கு போதிய மெஜாரிட்டி இல்லையென்றால், அடுத்த மெஜாரிட்டி உள்ள சட்ட மன்ற குழுத்தலைவரை அழைக்க வேண்டும். இதில், சட்டசபையில் நடத்தப்படும் வாக்கெடுப்பின்படி சபாநாயகரின் முடிவே இறுதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்ட தகவலை தெரிவித்துள்ளனர்.
மூன்றில் இரண்டு மடங்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தால்தான் அவரை சட்ட சபைக் குழுத்தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இமாச்சலப்பிரதேச வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து ஸ்டாலினிடம் தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், இன்று கூடவிருக்கும் திமுக உயர்மட்டக்குழுவில் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபையில் துரைமுருகன் பேசும் போது, ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒரு ஆபத்து என்றால் நாங்கள் காப்பாற்றுவோம் என்று கூறியிருந்தார். இதேபோல இரு தினங்களுக்கு முன்பு பேசிய சுப்புலட்சுமி ஜெகதீசன், சட்டசபையில் ஒ.பன்னீர் செல்வத்திற்கு திமுக ஆதரவு தரும் என்று கூறினார்.
இதனை ஸ்டாலின் உடனடியாக மறுத்துள்ளார் என்றாலும் ஓ.பன்னீர் செல்வத்தில் ராஜினாமா அறிவிப்பு வெளியான உடனேயே, பேட்டி கொடுத்த ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் 4வது முறையாக முதல்வராக பதவியேற்பார் என்று கூறினார். இந்த நிலையில் இன்றைய திமுக உயர்மட்டக்குழு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பன்னீர் செல்வத்திற்கு திமுக ஆதரவு தருமா? அல்லது இருவரின் சண்டையில் இடையில் புகுந்து திமுக ஆட்சியமைக்க உரிமை கோருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதிமுக ரெண்டு பட்டதில் வலுவான எதிர்கட்சி ஆளுங்கட்சியாக அமர்ந்து விடுமே என்ற பேச்சும் அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications