மதுக்கடையை மூடக் கோரி போராடி கைதான 15 பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காந்தியவாதி சசிபெருமாளின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு தொடர்பான போராட்டங்கள் வலுப் பெற்றுள்ளன. ஆங்காங்கே டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தவகையில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், அமைந்தகரையில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென கடைக்குள் புகுந்த மாணவர்கள் அங்கிருந்த மதுபாட்டில்களை உடைத்து நொறுக்கினர்.
போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைத்தனர். இந்தப் போராட்டத்தின் போது மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட 5 மாணவிகள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், இந்த 15 மாணவர்களும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தனர். அவர்களின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம், அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications