தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பல்லடம் பெண் - சிகிச்சை பலனின்றி மரணம்
பல்லடம்: பல்லடம் அருகே தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள தொட்டம்பட்டி பள்ளக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி ராணி(35). சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் வீட்டிற்கு வெளியே வந்த ராணியை பாம்பு ஒன்று கடித்தது.

ராணியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தார் பாம்பை அடித்துக் கொன்றனர். பின்னர், அப்பாம்புடன் ராணியை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு ராணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சைப் பலனின்றி ராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications