ஆசிரியர்களை மகிழ்வித்து மகிழும் குடும்ப விழா!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர்களை மகிழ்வித்து மகிழும் குடும்ப விழா சிறப்பாக நடைபெற்றது
மாலை 4.30 மணியளவில் ஆறாம் வகுப்பு "அ" பிரிவு பெற்றோர்கள் சார்பில் ஆசிரியர்களை மகிழ்வித்து மகிழும் குடும்ப விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பெற்றோர் ஆசிரியக் கழகத் தலைவர் சகாய அமலன் அவர்கள் தலைமையேற்றார். பெற்றோர் சார்பில் மு. ஸ்ரீதேவி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

பல்வேறு விருதுகள்
இந்நிகழ்வில் தொடர்ந்து பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி, அதிகரித்து வரும் மாணவர் சேர்க்கை,பள்ளியின் வளர்ச்சியில் முழு ஈடுபாடு, சிறந்த பள்ளிக்கான விருது, தூய்மைப்பள்ளிக்கான மாநில விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து, தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் அரசு பள்ளியை முன்நிறுத்தி வருதல், போன்ற செயல்களை பாராட்டியும், வாழ்த்தியும் தலைமையாசிரியர் . பீட்டர் ராஜா அவர்களுக்கு பெற்றோர்கள் நினைவு பரிசு வழங்கி கௌரவம் செய்தனர்.

ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு
மேலும் உதவி தலைமையாசிரியர்களான எஸ். விஜயலட்சுமி, அ. முத்துவேல்ராஜன், மு. கோமதிஜெயம், ஆறாம் வகுப்பு "அ" பிரிவு ஆசிரியர்கள் ஆகியோர்க்கு இரண்டாம் பருவத் தேர்வில் முதல் ஐந்து இடம் பெற்ற மாணவர்கள் பி. மகாலட்சுமி, எம்.நிஷாலி, ஜே.கே.ஜனனி, வி.அபிநயா, ஆர்.ஆகாஸ் ஸ்ரீ மூலம் மரியாதை செய்யப்பட்டு, அம்மாணவர்களின் பெற்றோர்களால் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பள்ளிக்கான நினைவுப் பரிசு
பள்ளிக்கான நினைவு பரிசை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சகாய அமலன் வழங்க தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார். பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக் குழுத் தலைவர் சகாய செல்வன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அழகு சுந்தரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நடன நிகழ்ச்சி, பாட்டுக்குப் பாட்டு
இந் நிகழ்வில் பெற்றோர்கள்,ஆசிரியர்களை மகிழ்விக்கும் வகையில் மாணவர்கள் மூலம் நடன நிகழ்ச்சி, பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி ஆகிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

பெற்றோர்களுக்கு லக்கி கார்னர்
மேலும் பெற்றோர்களுக்கான லக்கி கார்னர் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு உணவு விருந்து அளித்து மரியாதை செலுத்தினர்.

பெற்றோர்களின் ஏற்பாடு
நிகழ்ச்சியின் இறுதியில் வகுப்பு ஆசிரியர் கோமதி ஜெயம் அவர்கள் ஏற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்களை பெற்றோர் சார்பில் தனபாக்கியம் அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும், பெற்றோர்களே செய்திருந்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications