கேட்டுச்சா.. பழ. கருப்பையா என்ன கேட்கிறார் பார்த்தீங்களா.. சடாரென திரும்பி பார்க்கும் பாஜக.. சரவெடி

இந்து ராஷ்ட்டிராம் குறித்து மூத்த அரசியல் தலைவர் பழ கருப்பையா கேள்வி எழுப்பி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: மிக முக்கியமான கேள்வி ஒன்றை தமிழக அரசியலின் மூத்த தலைவர் பழ.கருப்பையா எழுப்பி உள்ளார்.. இதனால், பாஜக தரப்பு கடுப்பாகி வருகிறது.
கடந்த 3 வருடங்களாகவே அதிகம் ஒலித்து வருவது, 2019-ல் அமித்ஷா முன்வைத்த 'ஒற்றுமைக்கான ஒற்றைமொழி' சித்தாந்தம்தான்.. ஒரே மொழி, ஒரே தேசம் என்கிற முழக்கம் இன்னமும் தொடர்கிறது..

தேசத்தை ஒருமைப்படுத்தத்தான் இந்தி தேவைப்படுகிறது என்கிறார் அமித்ஷா.. ஆனால், இன்று பாஜக முன்னிறுத்தும் இந்த கோட்பாடுக்கு அன்றே பதில் தந்துள்ளர் பெரியார்.

திணிப்பு

திணிப்பு

1939-ல் "குடிஅரசு' இதழின் தலையங்கமே அன்று "வீழ்க இந்தி" என்பதுதான்.. அதுமட்டுமல்ல, இந்தியை, நம்மை அடிமைப்படுத்தும் மொழி என்றும், ஒரு நாட்டை, அந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்த வேண்டுமானால், அந்நாட்டு மொழி கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்பதற்கிணங்க இந்தி, திராவிட மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு இடையிலும் திணிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்..

 ஆபத்து ஆபத்து

ஆபத்து ஆபத்து

"நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழைவிட மேலான ஒரு மொழி இந்த நாட்டில் இல்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல. அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமை... அதுபோல அதனை, 'எல்லாம் வல்ல மொழி' என்பதும் அறியாமை. தமிழுக்கு ஆபத்து வரக்கூடாது என்று நினைக்கிறேன் என்றால், இதைவிட மோசமான ஒன்று நம்மீது வந்து உட்கார்ந்துவிடக்கூடாது என்ற கவலையினால்தானே தவிர, தமிழ் எல்லாம் வல்ல மொழி என்று நான் நினைத்ததில்லை. தமிழ் புனிதத் தன்மை உடையது என்பதற்காக, நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் தமிழ்தான் சிறந்ததாக இருந்தது என்பதற்காகவே போராடுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

 பழ.கருப்பையா

பழ.கருப்பையா

இதைதான் முதல்வர் ஸ்டாலினும் வேறு விதமாக பதிவு செய்திருந்தார்.. "ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்பது நம் ஒற்றுமையை தகர்க்கும். அவ்வாறாக நம் ஒற்றுமையை தகர்க்கப் பார்ப்பவர்கள் இந்தியாவின் எதிரிகளாவர். இதுபோன்ற துர்சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடம்கொடுக்கக் கூடாது" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. ஒரே நாடு, ஒரே மொழி வரிசையில் இனி ஒரே சாதி தான் என்று சட்டம் நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் முன்வருமா? என்று மூத்த தலைவர் கி.வீரமணியும் கேட்டிருந்தார். ஓநாய் எந்தக் காலத்தில் சைவமாகிறதோ, அந்தக் காலத்தில் வேண்டுமானால் இப்படி ஒரு அதிசயம், அற்புதத்தை நிகழ்த்த முடியும் என்றும் விமர்சித்திருந்தார்.

 வேளாங்கண்ணி

வேளாங்கண்ணி

இப்படி, ஒரே நாடு ஒரே மொழி என்பதன் மீதான தலைவர்களின் எதிர்மறை கருத்துக்கள் தொடர்ந்தபடியே உள்ளன.. இதே விவகாரத்தைதான், மூத்த தலைவர் பழ.கருப்பையாவும் கையில் எடுத்துள்ளார்.. மூத்த அரசியல்வாதியும், எழுத்தாளரும், நடிகரும், முன்னாள் எம்எல்ஏவும், தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளருமான பழ. கருப்பையா, குன்னூரில் மதநல்லிணக்க விழா ஒன்றில் கலந்து கொண்டார்.. அப்போது மிக முக்கியமான கேள்வி ஒன்றை பழ.கருப்பையா எழுப்பியிருந்தார்.

 ஹிந்து ராஷ்ட்ரியம்

ஹிந்து ராஷ்ட்ரியம்

"வேளாங்கண்ணி கிறிஸ்தவ கோயிலுக்கு செல்பவர்களும், நாகூர் ஆண்டவர் கோயிலுக்கு செல்பவர்களும் பெரும்பாலும் இந்துக்கள்தான்.. அவர்கள் கடவுள் வேறு, நம்முடைய கடவுள் வேறு என்று மக்கள் நம்புவதில்லை.. மக்களிடையே எந்த வேறுபாடுகளும் இல்லை, ஆனால் நாட்டை நடத்துபவர்களிடம் வேறுபாடு உண்டு.. அதனால்தான் மதநல்லிணக்க மாநாடுகளை நடத்தும் கட்டாயம் இப்படி ஏற்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி என்ற சிந்தனைகள் எல்லாம் சமீபகாலமாகவே அதிகமாக எழுந்துவருகின்றன.. ஒரே மொழி இந்தி,. ஒரே நாடு இந்து ராஷ்ட்ரியம்.. அப்படியானால், மற்றவர்கள் எல்லாம் எங்கே செல்வது?" என்று கேள்வி எழுப்பி உள்ளார் பழ.கருப்பையா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+