உலகக் கோப்பை, யூரோ கோப்பை அணிகள் போலத் தான் மநகூ-யின் வெற்றியும் தோல்வியும் - சொல்கிறார் வைகோ
சென்னை: உலக கோப்பை, யூரோ கோப்பை போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அணி தோல்வி அடைந்து விடலாம். தோல்வி அடைந்த அணி வெற்றி பெறலாம். இதே போன்று எங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் மதிமுக சார்பில் நடத்தப்படுகிறது. தேர்தல் சமயத்தில் சில கட்சிகள் கூட்டணிக்கு வரலம், பின்னர் விலகிச் செல்லலாம். ஆனால், முன்பு தெரிவித்தது போலவே, 4 கட்சிகளும் நிரந்த கூட்டியக்கமாக செயல்படும்.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகிய நான்கு கட்சிகளும் கூட்டியக்கமாக எங்களது பயணத்தை தொடருவோம். சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து தற்போது பேசவிரும்பவில்லை.
மல்யுத்தத்திலே விழுந்து விடலாம். உலக கோப்பை, யூரோ கோப்பை போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அணி தோல்வி அடைந்து விடலாம். தோல்வி அடைந்த அணி வெற்றி பெறலாம். இதே போன்று எங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று அவர் கூறினார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications