மக்கள் விரும்பும் மாற்றத்தை மக்கள் நலக் கூட்டணி தரும்!- நல்லக்கண்ணு
மதுரை: வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை மக்கள் நலக் கூட்டணி தரும் என்று மூத்த தலைவர் இரா நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
மக்கள் நலக்கூட்டணியின் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு மதுரை ஒத்தக்கடை 4 வழிச்சாலை அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. மாநாட்டுக்கு, மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் வரவேற்றுப் பேசினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மாநாட்டை தொடங்கி வைத்து வாழ்த்திப் பேசினார்.
அவர் கூறுகையில், "நாம் பல தேர்தல்களைச் சந்தித்து விட்டோம். தேர்தலுக்குப் பின்பு ஆட்சிக்கு வருபவர்கள் மக்களை மறந்து விடக்கூடிய நிலைதான் உள்ளது.
தமிழகத்தில் வருகிற தேர்தலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் நினைத்து விட்டார்கள். அதற்கான எதிர்பார்ப்பும் விருப்பமும் மக்களிடம் அதிகம் உள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடிய கடமை மக்கள் நலக் கூட்டணிக்கு உள்ளது. நிச்சயம் இந்தக் கூட்டணி அதைச் செய்யும்.
ஒத்தக்கடையில் உள்ள பாரம்பரிய சின்னமான யானைமலையை உடைத்து சின்னபின்னமாக்க திட்டமிட்ட போது அதை மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் தான் தடுத்து நிறுத்தின.
மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த கூட்டணி செயல்படும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை," என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications