எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதை எதிர்த்து வழக்கு இல்லை.. செம்மலை திடீர் முடிவு
வழக்கறிஞர் ஜோதி என்பவர் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர அதிமுக எம்எல்ஏ செம்மலை மேற்கொண்டிருந்த திட்டம் கைவிடப்பட்டது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதை எதிர்த்து வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடர வைத்திருந்த திட்டத்தை மேட்டூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான செம்மலை கைவிட்டார்.
ஜெயலலிதாவுக்கு நீண்ட காலம் தனிப்பட்ட வழக்கறிஞராக பணியாற்றி அனுபவம் கொண்ட வழக்கறிஞர் ஜோதி என்பவரை பயன்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து, சென்னை ஹைகோர்ட்டில் இன்று பொது நல வழக்கு தொடர திட்டமிட்டிருந்தார் செம்மலை.

நீதிபதிகள் ரமேஷ் குலுவாடி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில், பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கு தொடரும் முடிவை செம்மலை திடீரென கைவிட்டார். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்படவிருந்த சட்டச் சிக்கல் தீர்ந்தது. ஓ.பி.எஸ் தரப்பும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் நட்பு பாராட்டுவதே இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
60 sec- எடப்பாடி பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதை எதிர்த்து வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடர வைத்திருந்த திட்டத்தை மேட்டூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான செம்மலை கைவிட்டார்.












Click it and Unblock the Notifications